தமிழ் தொழில்நுட்ப கருவிகளுடன் இவ்வுலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ் மொழியை தொழில்நுட்ப உலகிற்கு இட்டிச் செல்ல வழிவகுக்கும் தமிழ் தொழில்நுட்ப கருவிகள்.

Sellinam-Keyboard

செல்லினம்

செயலி

அண்டிரொயிட்(Android), ஐஓஎஸ்(iOS) போன்ற திறன்பேசிகளில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் செயலி.இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

GoogleTranslate

கூகுல் மொழிப்பெயர்ப்பு

செயலி

படங்களில் காணப்படும் சொற்களை 103 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்க இச்செயலியைப் பயன்படுத்தலாம்.

omtamil-logo-2017

ஓம்தமிழ்

செயலி

குறள் தேடுபொறி, கலைச்சொல் திரட்டுகள், தூயதமிழ் சொற்கள், இலக்கணம் ஆய்வி, ஒருங்குறி மாற்றி

gboard

ஜீ போர்ட்

செயலி

குரலொலியில் பேசப்படும் கருத்தை பயனரின் விருப்ப மொழிக்கு ஏற்ப புலனம்,குறுந்தகவல் போன்ற செயலிகளில் தானியங்கி தட்டச்சாக செயல்படும்.

Tamil Technical Dictionary

தொழில்நுட்ப அகராதி

செயலி

ஆங்கில மொழிக்கு இணையான தமிழ் தொழில்நுட்ப சொற்களஞ்சியங்களின் தொகுப்பு.இயங்களையில் இல்லாமலே இச்செயலியைப் பயன்படுத்தலாம்.

switkey-autocorrect

சுவிட்கி விசைப்பலகை

செயலி

150க்கும் மேற்பட்ட மொழிகளில் எழுத்துப்பிழையீன்றி துல்லியமாக தட்டச்சு செய்யவும்,தனிநபர் மொழிநடை மற்றும் விருப்பத்திற்கேற்ப தட்டச்சு பலகை வடிவமைக்கவும் பயன்படும்.

g.h.input

கூகுல் கையெழுத்து உள்ளீடு

செயலி

97 மொழிகளில் உங்களின் கையெழுத்து மற்றும் இமோஜிஸ் என்றழைக்கப்படும் உணர்ச்சிக்குறிகளை இணைத்து தட்டச்சு செய்யலாம்.

google indic keyboard

கூகுல் இன்டிக் விசைப்பலகை

செயலி

ஒலிபெயர்ப்பு முறை, சுயமொழிநடை தட்டச்சு, கையெழுத்து முறை என சிறப்புத்தன்மை கொண்ட இச்செயலியில் சமூக வலைத்தளங்களிலும் மின்ன்ஞ்சல் அனுப்பவும் பயன்படுத்தலாம்.

Tamil_Virtual_University

தமிழ் இணையக் கல்விக்கழகம்

இணையத்தளம்

தமிழ் மொழி, தொழில் நுட்பம், கணினித் தமிழ் ஆகியவற்றின் தகவல் வளங்களை பகிர்வதே இவ்வகபக்கத்தின் நோக்கமாகும்.

tamilcube_hiresthumb

தமிழ் கியூப்

இணையத்தளம்

ஆங்கில சொற்களஞ்சியங்களுக்கு ஏற்ற செரிவான இந்திய,ஆசிய மொழிகளின் சொற்களஞ்சியங்களைப் பெறலாம்.

LanguageTool_icon256

மொழிக்கருவி

இணையத்தளம்

வாக்கியங்களின் இலக்கணப்பிழைகளை திருத்தவும்,ஒற்றுப்பிழைகளை நீக்கவும் அவற்றின் இலக்கணவிதிகளை அறியவும் இந்த அகபக்கத்தை நாடலாம்.

wiki

தமிழ் விக்கிப்பீடியா

இணையத்தளம்

உலக தமிழர்களின் கூட்டு முயற்சியான இவ்விணையதளத்தில் பலதுறை தகவல்களைப் பெறலாம்.உங்களுடைய பங்களிப்பையும் தரலாம்.

suratha-pongutamil

சுரதா பொங்கு தமிழ்

இணையத்தளம்

எந்தவொரு எழுத்துருவாக இருப்பினும் இவ்வகபக்கத்தில் உள்ளிட்டு செய்தால், தமிழ் எழுத்துகளில் சீராக வாசிக்க முடியும்.

tamilpulavar

தமிழ்ப் புலவர்

இணையத்தளம்

சொற்களின் விளக்கம்,அவற்றின் இணை/எதிர் சொல்,பழமொழி,அசை தேடல் ஆகியவற்றை வழங்கும் தமிழ்புலவர் அகபக்கம்.

project-madurai

மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

இணையத்தளம்

நூற்றுக்கணக்கான சங்க இலக்கிய நூல்களை தன்னார்வளர் அடைப்படையில் மின்னியல் படிவமாக வழங்கும் தளம்.

images 34

எழுத்துவடிவிலிருந்து குரலொலிக்கு மாற்றும் கருவி

இணையத்தளம்

தமிழில் தட்டச்சு செய்யப்படும் வாக்கியத்தை குரலொலியாக மாற்றியமைக்கும் இலவச கருவி.

kuralsoft

குறள் தமிழ்ச் செயலி

மென்பொருள்

குறள் தமிழ்ச் செயலி மைக்ரோசாப்ட், வின்டோய்ஸ், கூகுல் டாக்ஸ்,ஜீ-மெய்ல், அடோப்,சமுக வளைத்தளங்கள் போன்றவற்றில் தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யலாம்.

firefox-logo

பையர்பொக்ஸ்-தமிழ்

மென்பொருள்

பையர்பொக்ஸ்-தமிழ் மென்பொருளை பயன்படுத்தி இனி நமது தேடல்களை தமிழ் மொழியிலேயே தொடங்கலாம்.

ekalappai

இ-கலப்பை

மென்பொருள்

தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்ய உதவும் இலவச மென்பொருள். தமிழ்00, ஒலியனியல், தைப்ரைட்டர், பாமினி மற்றும் என்ஸ்கிரிப்ட் போன்ற ஐந்து வகையான தமிழ் தட்டச்சுகளுக்கு துணைபுரியும்.

mentamizh 2

மென்தமிழ்ச் சொல்லாளர்

மென்பொருள்

தமிழில் தட்டச்சு செய்து, சந்தி பிழைகளை திருத்தம் செய்யவும்,உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் மாற்றியமைக்கவும் மென்தமிழை பயன்படுத்தலாம்.

nhm-converter

என்.எச்.எம் எழுத்துரு மாற்றி

மென்பொருள்

பனுவலை ஒரு மொழியிலிருந்து தமிழ்,இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்க்க செய்ய உதவும் மென்பொருள். பிற எழுத்துருகளுக்கும் துணைபுரியும்.

kamban software

கம்பன் மென்னியம்

மென்பொருள்

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் காணப்படும் சொற்பிழைகளை அதன் பொருள் விளங்க தானியங்கியாக திருத்தம் தன்மை கொண்டது. இன்னும் பல வசதிகள் கொண்டது.

libreoffice-logo

லிப்ரே ஓபிஸ் 4.3

மென்பொருள்

கட்டற்ற திறன்மூல மென்பொருளான லிப்ரே ஓபிஸ் 4.3 தமிழ் உள்பட 110 பிற மொழிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

azhagi

அழகி,

மென்பொருள்

அழகி, அழகி+ என இரு இலவச தமிழ் மென்பொருள் தமிழ் அல்லது இந்திய மொழிகளை தட்டச்சு செய்ய உதவுகிறது. ‘ஒலியியல் அமைப்பு’ மூலம் தமிழ் தட்டச்சு செயல்திறனை அதிகரிக்கும் தன்மை கொண்ட்து.

எங்களை தொடர்புக் கொள்ளவும் Contact Us

உங்கள் எண்ணங்களைக் கேட்க விரும்புகிறோம் We would love to hear your thoughts