12ஆம் தமிழ் இணைய மாநாடு
ஆகத்து 15, 2013 – ஆகத்து 18, 2013

உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழகதுடன் இணைந்து 12ஆம் தமிழ் இணைய மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாடு ‘கைத்தொலைப்பேசியில் தமிழ் கணிமை’ என்னும் கருப்பொருளைத் தாங்கி மலர்ந்தது. மொழி மொழியியல் புலம், தகவல் தொழில் நுட்ப மையம் , தித்தியான் திசிட்டல் திட்டம் ஆகியவை ஆதரவளித்தனர்.

  • SHARE:
கண்காட்சி

கண்காட்சி

இந்த மாநாட்டில் 98 ஆய்வு கட்டுரைகள் படைக்கப்பட்டன. கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு, மொழிக் கருவிகள், இணையமும் மென்பொருள்களும் செல்பேசிகளும், கல்வி ஆகிய பிரிவுகளில் கட்டுரைகள் இடம்பெற்றன.

உலகளவில் தமிழ் செயலி போட்டி

உலகளவில் தமிழ் செயலி போட்டி

தொழில் நுட்பக் கருவிகளின் அதித தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடுக்கொடுக்கவும் தமிழ் கணிமையில் அதிகமான நிரலர்களை ஈர்க்கும் நோக்கத்திலும் “அப்பிள் ஐ.ஒ.எஸ், வின்டோஸ் 8, எச்.தி.எம்.எல் ஆகிய கருவிகளுக்கு உலகளவில் தமிழ் செயலி போட்டியை உத்தமம் அறிவித்தது.